தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழக காவல்துறையில், உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ) பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உடனே ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TK) - 660
சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (AR) - 276
சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TSP) - 33

காலியிடங்கள் = 969

முக்கிய தேதிகள்:

எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி: 30.12.2019 (இன்று) முதல் 12.01.2020 வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12.01.2020, காலை 10.00 முதல் மதியம் 12.30 வரை

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முறை:
ஆன்லைனில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின், http://www.tnusrbonline.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று, User ID மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com