தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்

தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்

3,552 காவலர்களுக்கான நேரடி தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுத் தேர்வு 2022-க்கான 3,552 இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை எண்: 02/2022-ஐ 30.06.2022 வெளியிடப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்க துவங்கும் நாள்: 07.07.2022.

இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.08.2022.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி காவலர் பொதுத் தேர்வு – 2022 நடத்தவிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இவ்வாரியத்தில் 07.07.2022 முதல் 15.08.2022 வரை கட்டுப்பாட்டு அறையில் "உதவி மையம்" வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், அலுவலக பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், தெளிவுகளுக்கு இந்த "உதவி மையத்தின்" சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான தகுதி அளவுகோல், தேர்வு செயல்முறை, மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 978903725 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com