\
TNPSC Office
TNPSC OfficeTNPSC Website

டிகிரி படித்தவரா? 1,30,400 ரூபாய் வரை ஊதியம் - டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு

உதவி ஜெயிலர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு
Published on: 

ரூ.35,400 ரூபாயிலிருந்து 1, 30,400 வரையிலான ஊதியத்தில் டிஎன்பிஎஸ்சி வேலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சிறைகளில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இன்றிலிருந்து (ஏப்ரல் 12) மே மாதம் 15-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதனை மே மாதம் 18-ஆம் தேதி வரை சரிசெய்துகொள்ள முடியும்.

கல்வித்தகுதி

• யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், டிகிரி முடித்திருக்க வேண்டும்

• போதிய உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 59

ஆண்களுக்கான பணியிடங்கள்: 55

பெண்களுக்கான பணியிடங்கள்: 5

ஊதிய வரம்பு

ரூ.35,400 ரூபாயிலிருந்து 1, 30,400 வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும்: ஜூலை 1

காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும். Paper-I, Paper-II என இரண்டு தேர்வுகள் நடைபெறும்.

வயது வரம்பு விவரம்

Age Details
Age DetailsTNPSC Website

மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/english/notification.aspx -யில் தெரிந்துகொள்ள முடியும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com