டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு? விசாரணை தொடங்கியது

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு? விசாரணை தொடங்கியது

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு? விசாரணை தொடங்கியது
Published on

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடங்களை பிடித்தது எப்படி என ஏற்கனெவே கேள்வி எழுந்தது. குரூப் 4 தேர்வில் அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இதைத்தொடர்ந்து குரூப் 2ஏ தரவரிசையின் 50 இடங்களில் 30 பேர் ராமேஸ்வரத்தில் குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வெழுதியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முறைகேடு நடந்துள்ளதா என கேள்வி எழும்பியது.

2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்கான முடிவு 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் பதிவேற்றம், சரிபார்ப்பு முடிவடைந்து முதல்கட்ட கலந்தாய்விலேயே பணி ஆணையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் கூறுகையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனவும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவை வெளியிட முடியும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com