குரூப்-1 முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் தள்ளிவைப்பு

குரூப்-1 முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் தள்ளிவைப்பு
குரூப்-1 முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் அவர்கள் நேற்று (08.02.2019) குரூப்-1 பற்றிய புதிய செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.1/2019-ல், தொகுதி – I ல் அடங்கிய பதவிகளுக்கான 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையினை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) 03.03.2019 அன்று நடைபெறுவதாகவும், முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மேற்படித் தேர்வின் முதன்மை (Mains) எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்படித் தேர்வின் முதன்மை (Mains) எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in –இல் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பத்தாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Exam) 2019 ஜுலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) முன்னர் அறிவித்தவாறே 03.03.2019 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த முழுத் தகவல்கள் டிஎன்பிஎஸ்சியின் (http://www.tnpsc.gov.in/) - இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com