வெளியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு அறிவிப்பு! எப்போது என்னென்ன தேர்வுகள்?

வெளியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு அறிவிப்பு! எப்போது என்னென்ன தேர்வுகள்?
வெளியானது டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வு அறிவிப்பு! எப்போது என்னென்ன தேர்வுகள்?

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் முக்கியப் பணியான குருப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 23 ந் தேதி வெளியிடப்படும் எனவும், நவம்பர் மாதம் முதன்மைத் தேர்வுகளும், 2024 ஜூலை மாதம் முதல்நிலைத் தேர்வும் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023  ஆண்டு அட்டவணையில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முக்கிய தேர்வுகளான குரூப்-2 மற்றும் குரூப்-1 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பல்வேறுத் தரப்பிலும் இந்தப் பணியிடங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல்நிலைத் தேர்வு நவம்பர் 2023 மாதம் நடத்தப்பட்டு, 2024 மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். முதன்மைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்பட்டு, நவம்பர் மாதம் தேர்வு  முடிவுகள் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் நேர்காணல் தேர்வும், கலந்தாய்வும் நடத்தப்படும் எனவும், காலிப் பணியிடங்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com