குரூப் 4 தேர்வு ரத்து இல்லை; கவலைப்பட வேண்டாம் - டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் 99 பேர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டது. இந்நிலையில் முறைகேடு காரணமாக குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, “ குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் விரைவில் வழங்கப்படும். ஒட்டுமொத்த தேர்வும் ரத்து கிடையாது. குரூப் 4-ன் அடுத்தக்கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான
தகவலில் உண்மை இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 9300 காலிப் பணியிடங்களுக்கான பணிகளை நிரப்பும் பணி கலந்தாய்வு மூலம் நடைபெறும். தேர்வு எழுதியவர்கள் கவலைப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளது