பொறியியல் படித்தவர்களுக்கு 1லட்சம் சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் 60 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி :
அசிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர்
அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட்
காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர் - 36
அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட் - 24
மொத்தம் = 60 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2019
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.02.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 07.04.2019
சம்பளம்:
மாதம் 37,700 - 1,19,500 ரூபாய் வரை
வயது வரம்பு: (01.07.2019 அன்று)
பொதுப் பிரிவினர் - 21 முதல் 30 வயது வரை
எம்பிசி / டிசி / பிசி / பிசி(முஸ்லிம்) பிரிவினர் - 21 முதல் 32 வயது வரை
எஸ்.சி / எஸ்.சி(ஏ) / எஸ்.டி பிரிவினர் - 21 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி:
அசிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர்: பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில், கம்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், கம்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பயின்றவராகவும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட்: பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில், கம்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங், கம்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பயின்றவராகவும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
(அல்லது)
முதுகலை பட்டயப் படிப்பில், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (எம்.சி.ஏ), கம்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் பயின்றவராகவும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கான கட்டண விவரம்:
நிரந்தரப் பதிவில் பதிவு செய்யாதவர்களுக்கான கட்டணம்: 150 ரூபாய்
எழுத்துத் தேர்வுக்கான கட்டணம்: 200 ரூபாய்
நிரந்தரப் பதிவில் பதிவு செய்தவர்கள்:
எழுத்துத் தேர்வுக்கான கட்டணம்: 50 ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முதலில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் போன்ற 9 இடங்களில் எழுத்து தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை குறித்த முழுமையான தகவல்கள் பெற,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_05_Notifyn_Assistant_System_Engineer_Analyst.pdf - என்ற இணையதளத்தை பார்க்கவும்.