கல்வி
குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் - கருத்து கேட்கும் டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் - கருத்து கேட்கும் டிஎன்பிஎஸ்சி
குரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வர்கள் வரும் ஒன்றாம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வினாப் பட்டியல் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் “ஒருங்கிணைந்த தொகுதி II மற்றும் IIA தேர்வு தொடர்பான வினாப் பட்டியல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துளை வரும் ஒன்றாம் தேதி வரை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.