ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக மின்வாரியத்தில் வேலை!

ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக மின்வாரியத்தில் வேலை!

ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக மின்வாரியத்தில் வேலை!
Published on

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கேங்மேன் (ட்ரெய்னி) பணிக்கு, 5,000 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
கேங்மேன் (ட்ரெய்னி) 

மொத்தம் = 5,000 காலிப்பணியிடங்கள்

பயிற்சி காலம்: 2 வருடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 07.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.04.2019
வங்கியில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 24.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு: 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - 18 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

பி.சி / எம்.பிசி பிரிவினர் - 18 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும்.

பொது பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.500 

பொதுப் பிரிவினர் / பி.சி / எம்.பிசி பிரிவினர் - ரூ.1,000

ஊதியம்:
2 வருட பயிற்சிக் காலங்கள் வரை ரூ.15,000 சம்பளமாகவும், அதன் பிறகு குறைந்தபட்சம் ரூ16,400 முதல் ரூ.51,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, ஐந்தாம் வகுப்பு கல்வியை தமிழ் வழியில் படித்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முடியும்.
ஆன்லைனில், https://www.tangedco.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற
https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com