பள்ளிகளில் வீடியோ ரீல்ஸ் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த விதிமுறைகள் - முழுவிவரம்

பள்ளிகளில் வீடியோ ரீல்ஸ் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த விதிமுறைகள் - முழுவிவரம்
பள்ளிகளில் வீடியோ ரீல்ஸ் செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த விதிமுறைகள் - முழுவிவரம்

பள்ளிகளில், மாணவர்கள் ரீல்களை செய்து (வீடியோ ரீல்ஸ்) சமூக வலைத்தளங்களில் வெளியீட்டால் நல்வழிபடுத்தும் நடைமுறைகள் என்ன என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விதிமுறைகள் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்,

1. பள்ளிகளில் வீடியோ ரீல்களை உருவாக்கினால், 5 திருக்குறள்களை படித்து பொருளுடன் ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும்.

2. இரண்டு நீதிக்கதைகளை வகுப்பறையில் சொல்ல வேண்டும்.

3. ஐந்து வரலாற்று தலைவர்களை பற்றி வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

4. வகுப்பு தலைவராக ஒரு வாரத்துக்கு செயல்பட வேண்டும்.

5. ஏன் தவறு செய்தார் என்று மாணவர் எழுத்துப்பூர்வமான விளக்கம் தர வேண்டும்.

6. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், பொது இடங்களில் இடையூறு செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், ராகிங் செய்தல், புகைப் பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், சாதி, மத, பொருளாதார பாகுபாடு பார்த்தல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துதல், உருவகேலி செய்தல் உள்ளிட்ட தவறுகளில் ஈடுபட்டாலும் முதல்முறை ஆலோசனை கூற வேண்டும்.

7. இரண்டாம் முறை நீதிக்கதைகள் போதித்தல், திருக்குறள் கூறுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

8. மூன்றாம் முறை அதே தவறை செய்தால் காவல்நிலையம் அழைத்து சென்று குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com