\
பொறியியல் மாணவர் சேர்க்கை: அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற  இன்று கடைசி நாள்

பொறியியல் மாணவர் சேர்க்கை: அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்று கடைசி நாள்

பொறியியல் மாணவர் சேர்க்கை: அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்று கடைசி நாள்
Published on

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது.

அதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்தனர். பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் மூலம் அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான நடைமுறை ஜூலை 31 ஆம் தேதி தொடங்கியது.

இதுவரையில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com