திருவாரூர்: இடிந்துவிடும் அபாயத்தில் பூந்தாழங்குடி பள்ளிக்கட்டடம் – மக்கள் அச்சம்

திருவாரூர்: இடிந்துவிடும் அபாயத்தில் பூந்தாழங்குடி பள்ளிக்கட்டடம் – மக்கள் அச்சம்
திருவாரூர்: இடிந்துவிடும் அபாயத்தில் பூந்தாழங்குடி பள்ளிக்கட்டடம் – மக்கள் அச்சம்

திருவாரூர் மாவட்டம் பூந்தாழங்குடி ஊராட்சியில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த  50 ஆண்டுகளுக்கும் மேலாக பூந்தாழங்குடி ஊராட்சியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 60 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் பழுது பார்க்கப்பட்டு உள்ளது. இருந்தபோதும் தற்போது இந்த கட்டிடத்தின் நிலை மிக மோசமாக உள்ளது, கட்டிடத்தின் மேற்கூரை மிக மோசமாக பாதிப்படைந்து, மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பிகள் தெரியும் அளவிற்கு உள்ளன.

மாணவர்கள் பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருக்கும் போதே மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சி பொறிந்து கொட்டுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளியில் பயின்று வருகிறார்கள், ஆகவே உடனடியாக அரசு தலையிட்டு புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்

இந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் அங்கன்வாடி கட்டடம் மற்றும் பள்ளி சுற்றுச் சுவர் ஆகியவை சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டது, அவையும் தற்போது பழுதடைந்துள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றுச் சுவர் அமைத்து புதிதாக ஒரு பள்ளிக் கட்டடத்தை கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com