சிபிஎஸ்இ பாடத்தில் சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர் படம் : டிடிவி.தினகரன் கண்டனம்

சிபிஎஸ்இ பாடத்தில் சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர் படம் : டிடிவி.தினகரன் கண்டனம்
சிபிஎஸ்இ பாடத்தில் சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவர் படம் : டிடிவி.தினகரன் கண்டனம்

சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் “ சிபிஎஸ்இ  எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது. அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை சிபிஎஸ்இ மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com