மலை உச்சி மீதுள்ள மரத்தின் மேல் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள்!

மலை உச்சி மீதுள்ள மரத்தின் மேல் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள்!

மலை உச்சி மீதுள்ள மரத்தின் மேல் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் -ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள்!

 
செல்போன் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பைத் தொடர சிக்னல் கிடைக்காத காரணத்தினால் மலை உச்சிக்குச் சென்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் படிக்கும் மாணவர்கள்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கபட்டள்ளது. அதனால் தொழிற்நுட்ப உதவியுடன் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் கற்றுதரும் முறை அறிமுகபடுத்தபட்டு அதன் வழியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருகின்றனர்


ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து மாணவர்கள் பாடம் பயின்று வரும் சூழலில், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து அதுவும், மலை உச்சியில் விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் அமர்ந்து அவ்வப்போது கிடைக்கும் சிக்னல்கள் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர்


தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதி மிகவும் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும், இந்த பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன, இந்த மலை கிராமங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் செல்போன் சிக்னல்கள் முற்றிலும் கிடைப்பதில்லை. அதனால் இந்த பகுதி மக்கள் வெளியூர்களை சேர்ந்த நபர்களிடம் பேச வேண்டுமென்றால் அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கோ அல்லது மலை உச்சியிக்கோ சென்று தான் பேச முடியும்.


இந்த நிலையில் கடமலைகுண்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் ஆன் லைன் வகுப்பில் கலந்துகொள்ள, தங்கள் வீட்டில் இருந்து தினந்தோறும் 2 கிலோமீட்டர் தூரமுள்ள மலை பகுதிக்கு நடந்து சென்று மலை உச்சியில் உள்ள மரத்தின் மீது அமர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆன் லைன் பாடங்களை படித்து வருகின்றனர்


இந்த கிராமத்தை சுற்றிலும் மேகமலை புலிகள் சரணாலயம் வனப்பகுதி அமைந்துள்ளது- இந்த பகுதியில் அடிக்கடி யானை, காட்டெருமை, மான், போன்ற வனவிலங்கள் அடிக்கடி நடமாடும். இதனையும் மீறி படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக மரத்தின் மீது அமர்ந்து மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர்


மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தி ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால், ஆன்லைன் வகுப்பை முடிந்த மாணவர்கள், மரத்தின்கீழே இறங்கியவுடன் அடுத்த மாணவர் மரத்தின் மீது ஏறி ஆன் லைன் வகுப்பில் கலந்து கொள்கிறார்.
ஆன் லைன் வகுப்புகாக நேற்று, இன்று அல்ல கடந்த 3 மாதங்களாக காலை மாலை இரண்டு வேளையும் நடந்தே வந்து பாடங்களை படித்து வருவருகிறோம். இந்த மலை உச்சியில் உள்ள மரத்தின் மீது ஏறி நின்றதால் தான் சிக்னல் கிடைக்கும். இப்படித்தான் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்கிறேன் என்றார் 12ம் வகுப்பு மாணவர் சிவராம்.


மழை காலங்களில் பல சமயங்களில் மழையில் நினைத்தவாரே மரத்தின் மேல் அமர்ந்து படித்து உள்ளதாகவும், சில சமயம், யானை, காட்டெருமை ஆகியவை வரும் அது போன்ற சமயங்களில் வீட்டிற்கு ஒடி விடுவோம் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இவ்வளவு கஷ்டங்களை தாங்கிக்கொண்டு படித்து வருவதாக கூறினார் 8ம் வகுப்பு மாணவன் தீபன


11ம் வகுப்பு மாணவன் நவீன பேசும்போது, சில நேரம் மரத்தின் மீது அமர்ந்து ஆன் லைன் வகுப்பில் பாடங்களை படிக்கும்போது சில சமயங்களில்; தீடிரென சிக்னல கிடைக்காது, சிக்னல் கிடைக்கும் வரை அதே இடத்தில் காத்திருப்போம் ஒரு சில நாட்களில் வகுப்புகள் முடிந்த பின்னரே சிக்னல் கிடைக்கும். சில நாட்களில் முழுமையாகவே சிக்னல் கிடைக்காது என்றார்


2 கிலோ மீட்டர் தூரம் நடந்து ,பலத்த காற்று, மழை, மற்றும் வன விலங்குகளின் அச்சறுத்தலோடு அடிக்கடி கட்டாகும் அலைபேசி சிக்னல் என பல பிரச்சனைகளையும் தாண்டி கல்வியின் மீதுள்ள ஆர்வமே இந்த மலை கிராம மாணவர்களை தடைகளை தாண்டி படிக்க வைக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com