கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு படிப்புகள் படிக்கலாமா?  என்ன சொல்கிறது யுஜிசி

கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு படிப்புகள் படிக்கலாமா? என்ன சொல்கிறது யுஜிசி

கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு படிப்புகள் படிக்கலாமா? என்ன சொல்கிறது யுஜிசி

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை முழு நேரமாக பயில பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு இளங்கலைப் பட்டப்படிப்புகள் அல்லது இரு முதுகலை பட்டப்படிப்புகளை வகுப்பறைக்கு சென்று படிக்க முடியும். ஒரே நேரத்தில் ஒரு பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பை ஒன்றையும் சேர்த்து படிக்க முடியும். எனினும் இரு படிப்புகளுக்கான வகுப்பறை நேரங்களும் வெவ்வேறாக இருப்பதை மாணவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஒரு மாணவர் ஒரு இளங்கலை அல்லது முதுநிலை படிப்பு பயிலும் போது இன்னொரு முழு நேர படிப்பை பயில யுஜிசி விதிகள் அனுமதிக்கவில்லை.

அதாவது ஒரு பட்டப்படிப்பு படிக்கும் போது குறுகிய கால படிப்பையோ ஆன்லைன் வகுப்பிலோ மட்டும்தான் பயில முடியும். இந்நிலை இனி மாற உள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் பல தரப்பட்ட கல்விகளை பயிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய தேசிய கல்விக்கொள்கையின் அம்சத்தை அனுசரித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப் பிரிவுகள்- அமைச்சர் பொன்முடி தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com