நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் - மத்திய அமைச்சர் தகவல்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்வதால் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகள் குறித்த குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தாமலேயே மாணவர்களை தேர்ச்சி அடைய வைக்கலாம் எனக் கூறிய தமிழக அரசு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறைக்கு பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கல்லூரி மாண்வர்கள் எழுத வேண்டிய தேர்வுகள் புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். அதன்படி “ ஜூலை 26 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் JEE முதன்மை தேர்வு ஜீலை 18,20,21,22,23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் JEE ADVANCED தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.