\
டிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை!

டிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை!

டிகிரி படித்தவர்களுக்கு கரூர் வைசியா வங்கியில் வேலை!
Published on

கரூர் வைசியா வங்கியில், பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate) பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

பிசினஸ் டெவலெப்மெண்ட் அசோசியேட் (Business Development Associate)

ஒப்பந்த அடிப்படையில் பணி காலம்: 3 வருடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019

வயது வரம்பு:

28.02.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.18,000 அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணியமர்த்தப்படும் இடம், பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் மாத சம்பளம் அதிகரிக்க வாய்ப்புண்டு.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதாவது ஒரு இளங்கலைப் பட்ட படிப்பை முழுநேர படிப்பில் பயின்று 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக அத்துறை சார்ந்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
1. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தை, தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயின்றிருந்தால், இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.
2. இரு சக்கர வாகனமும், உரிய ஓட்டுநர் உரிமமும் வைத்திருத்தல் அவசியம். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. Online Psychometric Tests
2. Personal Interview

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://www.kvbsmart.com/Careers/Norms_20190327I.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com