`TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டியுங்கள்’- ஆசிரியர்கள் கோரிக்கை

`TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டியுங்கள்’- ஆசிரியர்கள் கோரிக்கை

`TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டியுங்கள்’- ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்காக இளநிலை கல்வியியல் படித்தவர்களும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், பலருக்கு OTP வருவதில் சிக்கல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இளநிலை கல்வியியல் முடித்தவர்களுக்கான அத்தாட்சி சான்றுகளும் செவ்வாய்க்கிழமைதான் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. எனவே TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பலரும் இணையதளம் வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்  தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தரப்பில் `ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மறு நியமன தேர்வு என்ற அரசாணையை 149 ஐ நீக்க வேண்டும்; வயது, T.E.T மதிப்பெண், Employment Seniority மற்றும் T.E.T Seniority ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும்; ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும்; தகுதி பெற்ற ஆசிரியர்களை உடனே பணியமர்த்த வேண்டும் ’ என பல கோரிக்கைகள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com