\
அண்ணா பல்கலை. துணைவேந்தராக தமிழரே வேண்டும் - ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்

அண்ணா பல்கலை. துணைவேந்தராக தமிழரே வேண்டும் - ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்

அண்ணா பல்கலை. துணைவேந்தராக தமிழரே வேண்டும் - ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்
Published on

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு ஆளுநரை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தலைசிறந்த, திறமையான, நேர்மையான கல்வியாளரை துணை வேந்தராக நியமிக்க வேண்டும் எனவும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இன்னாள் பேராசிரியர்களை துணை வேந்தராக தேர்வு செய்தால், பல்கலைக்கழக ஊழியர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com