ஆசிரியர் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இன்று காலை வெளியிடப்படுகிறது.

2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு, ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. www.tnscert.org என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். இதில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.250 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வில் சரிபார்க்கப்பட்ட பிறகு, சேர்க்கை உறுதி செய்யப்படும். இணையதளத்தில் விண்ணப்பங்களை ஜூன் 21 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பங்கள் பதிவேற்ற கடைசி நாள், சிறப்பு இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com