கால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு
கால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

மருத்துவம் பயில விரும்பி நீட் தேர்வில் தகுதி பெறாத மாணவர்களும், கால்நடைகளின் மீது அதிக அன்பும் கொண்ட பிளஸ்டூ முடித்த மாணவர்களும் கால்நடை மருத்துவராக வாய்ப்புள்ளது. இதனைப் பயன்படுத்தி தங்களின் மருத்துவர் கனவை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பட்டப்படிப்புகள்:
1. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு - 5 1/2 ஆண்டுகள்
2. உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்
3. கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்
4. பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்

காலியிடங்கள்:
1. பி.வி.எஸ்சி & ஏஎச் பட்டப்படிப்புகள் - 360 இடங்கள்
2. பி.டெக் (Food Technology) - 40 இடங்கள்
3. பி.டெக் (Poultry Technology) - 40 இடங்கள்
4. பி.டெக் (Dairy Technology) - 20 இடங்கள்

மொத்தம் = 460 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2019, மாலை 05.45 வரை
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 24.06.2019
கவுன்சிலிங் நடைபெற தொடங்கும் நாள்: 09.07.2019


வயது வரம்பு:
31.12.2019 அன்றுக்குள், 17 வயது முதல் 21 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பிளஸ்டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைப் பயின்று அதில் 179 முதல் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்

குறிப்பு:
சாதி அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு, கட் ஆப் மதிப்பெண்களில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://www.tanuvas.ac.in/ugadmin.html - என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் 10.06.2019க்குள் சென்று சேருமாறு அனுப்ப வேண்டும்.

தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600 051.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, 
http://www.tanuvas.ac.in/ugadmission/notification_tamil_2019.pdf & http://www2.tanuvas.ac.in/ugadmission/Instructions/Prospectus.pdf?r=20190529182652- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com