இன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்

இன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்

இன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்
Published on

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 50 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவிகித அகில இந்திய இடங்கள் போக 2 ஆயிரத்து 594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதேபோல் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய அளவிலான 30 இடங்கள் போக மீதமுள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com