\
தேசிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராயக் குழு - தமிழக அரசு

தேசிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராயக் குழு - தமிழக அரசு

தேசிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராயக் குழு - தமிழக அரசு
Published on

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை எனவும் இருமொழிக்கல்வி மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். புதியக் கல்விக்கொள்கையில், மும்மொழிக்கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையளிப்பதாகவும் தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழ் மொழிக்கோ, தமிழக மக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com