`பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் இனி நாங்க படிக்கலாம்’- புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள்

`பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் இனி நாங்க படிக்கலாம்’- புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள்
`பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் இனி நாங்க படிக்கலாம்’- புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள்

ரூ.1,000 மாத உதவித்தொகைக்கான 'புதுமைப்பெண்' திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்றார். இந்த திட்டத்துக்கு மாணவிகள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அரசின் இந்த முன்னெடுப்புக்கு, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளன. இந்த திட்டம் குறித்து, `நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட சிங்கப் பெண்களே... கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணையும் உங்களுக்கு வாழ்த்துகள்’ என்ற வரிகளுடன் ஒரு லட்சம் மாணவிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித்திட்டத்தில் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் மாணவிகளுக்கு இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

`பெற்றோர் கஷ்டப்படும் நிலையில், அரசின் இந்த உதவித்தொகை எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்’ என்று மாணவி ஹேமலதா புதிய தலைமுறையிடம் தெரிவித்தார். `தையல் தொழிலாளியின் மகளான எனக்கு பெரும் உதவியாக இது இருக்கும். என் கல்விக்கான செலவுகளை இந்த பணத்தில் நான் செய்வேன். பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் படிக்கலாம்’ என்று மாணவி துர்காதேவி புதிய தலைமுறையிடம் தெரிவித்தார். இதேபோல பல மாணவிகள் தங்கள் கருத்துகளை நம்மிடையே தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com