வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்: இந்த இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்!

இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
students
studentsFile image

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8,51,303 மாணவ மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. இவர்களில் 50,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்ததால், பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநிலையை பாதிக்க வாய்ப்பு உள்ளதென கூறப்பட்டு, தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

students
studentspt desk

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என சொல்லப்பட்டது.

இதில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் கழித்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள முடிவுகளை மாணவ மாணவியர்

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிய, மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்.

வேறு எங்கெல்லாம் அறியலாம்?

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

மாணவ மாணவிகள் தாங்கள் அளித்த உறுதிமொழி படிவத்தில் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

தனித் தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது அளித்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு அனுப்பப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த வருடதேர்வு முடிவு புள்ளிவிவரங்கள்...

மாணவ மாணவியர் மொத்த தேர்ச்சி விவரம்
மாணவ மாணவியர் மொத்த தேர்ச்சி விவரம்
மாவட்ட வாரியாக அரசுப்பள்ளி மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்
மாவட்ட வாரியாக அரசுப்பள்ளி மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்
பாட வாரியாக மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்
பாட வாரியாக மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்
பள்ளி வாரியான பிரிவுகள் - அதன் தேர்ச்சி விகிதங்கள்
பள்ளி வாரியான பிரிவுகள் - அதன் தேர்ச்சி விகிதங்கள்
பாட வாரியான மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்
பாட வாரியான மாணவ மாணவியர் தேர்ச்சி விகிதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com