புதிய பாடத்திட்டம்: கல்வியாளர்களுடன் கருத்தரங்கு

புதிய பாடத்திட்டம்: கல்வியாளர்களுடன் கருத்தரங்கு
புதிய பாடத்திட்டம்: கல்வியாளர்களுடன் கருத்தரங்கு

தமிழக ‌பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர பல முயற்சிகளை பள்ளிக் கல்வி துறை‌ முன்னெடுத்து வருகிறது.‌ அதன் தொடக்கமாக க‌ல்வியாளர்களுடனான கருத்தரங்கம் இன்று நடைபெற்றுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத்திட்டத்தினால் பள்ளிக்கல்வியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவே கருதப்படுகிறது. அதனை களையும் விதமாக புதிய பாடத்திட்டத்தினை உருவாக்கிட உயர்மட்டக் குழு, பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டதோடு மாநிலம் முழுதும் உள்ள கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்டறியப்படுகின்றன. அதன்  தொடக்கமாக க‌ல்வியாளர்களுடனான கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

இதனிடையே, ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அம்மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் விதமாக மாற்றப்பட்ட வேண்டும் என்கிறார் பாடத்திட்ட வடிவமைப்பு குழு உறுப்பினரான இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டமைக்கப்படும் பாடத்திட்டமாவது எந்தவித தேர்வுகளையும் எதிர்கொள்ளும் விதமாக நமது தமிழக மாணவர்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com