டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் பயோ - மெட்ரிக்; செல்போன் ஜாமர் - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் பயோ - மெட்ரிக்; செல்போன் ஜாமர் - அமைச்சர் ஜெயக்குமார்
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் பயோ - மெட்ரிக்; செல்போன் ஜாமர் - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் பயோ - மெட்ரிக் இயந்திரங்கள், ஜாமர் பொருத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பணியாளர் சீர்த்திருத்தத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர், டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் மையங்‌ளில் பாதுகாப்பு வசதியினை பலப்படுத்துவதற்காக பயோமெட்ரிக் வருகை பதிவேடு, ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்று கூறினார். இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா‌கவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற விவாதத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக திமுக வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த அமைச்சர், முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும், இதுவரை 50பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால், பட்டதாரிகள் துப்புரவு பணியில் ஈடுபடுவதாகவும் திமுக குற்றஞ்சாட்டியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com