சீருடை பணியாளர் உடற்தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

சீருடை பணியாளர் உடற்தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

சீருடை பணியாளர் உடற்தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!
Published on

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், மின்சார வாரியம் நடத்த இருந்த போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டித் தேர்வு ஆகியவை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற இருந்தன.

இந்நிலையில் நிர்வாக காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஏப்ரல் 24 முதல் மே16ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெற இருந்த கணினி வழித்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com