"1, 2ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது" - பள்ளிக்கல்வித்துறை

"1, 2ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது" - பள்ளிக்கல்வித்துறை
"1, 2ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது" - பள்ளிக்கல்வித்துறை

1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வீட்டுப்பாடம் தர சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும், ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே இது பொருந்தும் என்றும், மற்றபடி உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com