``திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது”- தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

``திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது”- தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
``திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படாது”- தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

``மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு; அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது” என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில், 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும், 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாளும் திருவண்ணாமலையில் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் பரவின. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார், அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதனிடையே 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாளும், உயிரியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் வந்தவாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி திருப்புதல் தேர்வு மாற்றமின்றி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், வணிக கணித பாடமேலும் சென்னையில் உள்ள எந்த பள்ளியிலிருந்து வினாத்தாள் கசிந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வணிக கணித பாடத்தின் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து வரும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில், ``மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதால் அதன் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும்; அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும். அந்த மதிப்பெண் தான் மாணவர்களின் மதிப்பெண்ணாகவும் இருக்கும். ஆகவே திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. அடுத்த மாதம் மற்றொரு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com