தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்

தமிழகத்தில் 2021 -22 ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்புகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில், தற்போது தேர்வு தேதிகள் விரிவாக பள்ளிக்கல்வித்துறை தளத்தில் அட்டவணையாக வெளியாகியுள்ளது. அவற்றின் முழுவிவரம் இங்கே:

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 6 - மொழித்தாள்
மே 14 - விருப்ப மொழித்தாள்
மே 18 - ஆங்கிலம்
மே 21 - தொழில்முறை கல்வி
மே 24 - கணிதம்
மே 26 - அறிவியல்
மே 30 - சமூக அறிவியல்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 10 - மொழிப்பாடம்,
மே 12 - ஆங்கிலம்
மே 16 - தாவரவியல், வரலாறு, உயிரியல், வணிகக் கணிதம், புள்ளியியல்
மே 19 -வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 25 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங்
மே 27-புள்ளியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல்
மே 31-இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 5 - மொழிப்பாடம்
மே 9 - ஆங்கிலம்
மே 11 - கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல் அறிவியல்
மே 13 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 17 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல், நர்சிங் தொழில்பாடம் மற்றும் பொதுப்பாடம்
மே 20 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 23 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்
மே 28 - தொழிற்பாடத் தேர்வு

இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com