\
'கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைக்கக்கூடாது' - தமிழக அரசு

'கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைக்கக்கூடாது' - தமிழக அரசு

'கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைக்கக்கூடாது' - தமிழக அரசு
Published on: 

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்து தண்டிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறும் மாவட்ட கல்வி அதிகாரிகளை மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் கருப்பசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com