ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - தேதி அறிவிப்பு

ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - தேதி அறிவிப்பு
ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92,000 இடங்கள் உள்ளதாகவும், அதற்கு 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 51 அரசு தொழில் நுட்பக் கல்லூரிகளில் உள்ள 16,890 இடங்களுக்கு 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் எனப்பட்டுள்ளது.

இதுவரை கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க நேரில் வர வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் உத்தரவுப்படி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற முகவரியிலும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை எண்களான 044-22351014 மற்றும் 044-22351015 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com