தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை போட்டித்தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதில் போட்டித்தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% இடங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ் மொழித்தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 3 & 4 தேர்வுகளில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாளுக்கான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் அமையும் என்றும் குறைந்தபட்சம் அதில் 40% மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும், தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது TNPSC, TRB, MRB, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய முகமைகள் நடத்தும் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழித்தாளுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள TNPSC தேர்வுகளுக்கான அறிவிப்பாணை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான அறிவிப்பாணை ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com