கல்வி
நாடு முழுக்க ஒரே கல்வி: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
நாடு முழுக்க ஒரே கல்வி: மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
நாடு முழுக்க ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற மனுவை, அது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்தியா முழுவதும் 6 வயது முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம், ஒரே கல்வி வாரியம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீதா உபாத்யாயா என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது. நாடு முழுக்க ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.