1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு... எப்போ இருந்து லீவு தெரியுமா?

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு... எப்போ இருந்து லீவு தெரியுமா?
1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு... எப்போ இருந்து லீவு தெரியுமா?

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை வருகிற 14 ஆம் தேதி தொடங்குவததாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிகழ் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பள்ளி வகுப்புகள் முழுமையாக நடைபெறாத நிலையில், இறுதித் தேர்வுகள் மே மாதம் 13 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மட்டும் வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com