காவல்துறையில் 621 எஸ்ஐ காலிப் பணியிடங்கள்... விண்ணப்பிக்க ரெடியா?
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 எஸ்.ஐ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ((டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டுள்ளது. அதன்படி 469 ஆண் சப்-இன்ஸ்பெக்டர்களும், 152 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூன் 1.
ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு
20 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். அதேசமயம் 01.07.2023 தேதி கணக்கின்படி 30 வயதை தாண்டியவராக இருக்கக்கூடாது. அதேசமயம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. BC/ MBC வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இரண்டு வயதும், எஸ்/ எஸ்.டி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரம் கீழே...
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ சோதனையும் நடைபெறும். இதுகுறித்த முழு விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.