கல்வி
விலையில்லா மடிக்கணினி கிடைக்குமா.. கிடைக்காதா? - காத்திருக்கும் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுமா அரசு?
12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கான மடிக்கணினி வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கல்லூரிக்கு மடிக்கணினி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது பள்ளி பாடத்தில் சந்தேகம் வரும்போது மடிக்கணினி இல்லாமல் சிரமப்படவேண்டியுள்ளது. 50% மேல் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயில்வதால் மடிக்கணினி அவசியம். கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியின் தேவை அதிகம் உள்ளது. மடிக்கணினி வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பெற்றோருக்கு வசதி இல்லை.
ஆகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது . இந்நிலையில் மடிக்கணினிக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.