சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது - மனித உரிமை ஆணையம் உத்தரவு

சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது - மனித உரிமை ஆணையம் உத்தரவு

சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது - மனித உரிமை ஆணையம் உத்தரவு
Published on

பள்ளி வகுப்பறைகளையும், கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, திருமங்கலத்தை அடுத்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவரின் மகன் சிவநிதி, திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், வகுப்பறையை சுத்தம் செய்யும்படி, வகுப்பாசிரியர், சிவநிதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சுத்தம் செய்யும் போது மேஜை விழுந்து, சிவநிதியின் இடதுகால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வகுப்பறையை சுத்தம் செய்யக் கூறியதால்தான் தனது மகன் காயமடைந்துள்ளதால், இது மனித உரிமை மீறல் எனக் கூறி, ஆதிசிவன் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், சுத்தம் செய்ய போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரையோ, வகுப்பாசிரியரையோ குறை கூற முடியாது எனவும், பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனவும் கூறி, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பள்ளிகளை கண்காணிக்கும்படி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com