புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
Published on

புதுக்கோட்டையில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டதால் தேர்வையும் ஆன்லைன் முறையிலேயே நடத்தவேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நேற்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று புதுக்கோட்டையிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி முறையில் செமஸ்டர் தேர்வை நடத்த கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com