கல்வி
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :10,38,022 எழுதுகின்றனர்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு :10,38,022 எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர்.
இதில் நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 406 மாணவர்களும், நான்கு லட்சத்து 95 ஆயிரத்து 792 மாணவிகளும், 43 ஆயிரத்து 824 தனித்தேர்வர்களும் அடங்குவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3 ஆயிரத்து 371 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்களோ ஆசிரியர்களோ அலைபேசி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.