SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2020-க்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

பதவிகள் குறித்த விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் ssc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யவும், ஆன்லைன் கட்டணம் செலுத்தவும் கடைசி தேதி: 31.01.2021.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரர்கள், சமீபத்தில் (தேர்வு அறிவிப்பு வெளியான தேதிக்கு முன் மூன்று மாதத்துக்கு மிகாமல்) எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் போட்டோ எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். போட்டோவில் தேதி அச்சிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தெற்கு மண்டலத்தில் முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு 29.5.2021ஆம் தேதி முதல் 07.06.2021ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்; மற்றும் புதுச்சேரி; ஆந்திராவில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம்; தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம்நகர், வாரங்கல் ஆகிய 21 மையங்கள்/நகரங்களில் நடக்கும்.

முழு விவரம்: SSC CGL 2020 Notification PDF Download

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com