4 நட்சத்திர அந்தஸ்து பெருமையை பெற்றது எஸ்.ஆர்.எம்

4 நட்சத்திர அந்தஸ்து பெருமையை பெற்றது எஸ்.ஆர்.எம்

4 நட்சத்திர அந்தஸ்து பெருமையை பெற்றது எஸ்.ஆர்.எம்
Published on

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 4 நட்சத்திர அந்தஸ்து பெருமையைப் பெற்றுள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் க்யூ’எஸ் என்ற அமைப்பு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு இந்த அந்தஸ்தை வழங்கியது. அதனை பெற்றுக்கொண்ட பல்கலைக்கழக தலைவர் சத்திய நாராயணன், இந்தியாவில் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே 4 நட்சத்திர தர மதிப்பீடு பெற்றுள்ளதாகவும், அதில் எஸ்.ஆர்.எம்-மும் ஒன்று என்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார். 
மேலும், 5 நட்சத்திர தர அந்தஸ்து பெறுவதே தங்கள் இலக்கு என்றும் அவர் கூறினார். இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதால், இந்த விருதை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com