உலக மகளிர் தினம்: மாணவர்களுக்கு ஊக்கத்தையும் மகளிர்க்கு உத்வேகத்தையும் வழங்கும் ஸ்ரீவித்யா

உலக மகளிர் தினம்: மாணவர்களுக்கு ஊக்கத்தையும் மகளிர்க்கு உத்வேகத்தையும் வழங்கும் ஸ்ரீவித்யா
உலக மகளிர் தினம்: மாணவர்களுக்கு ஊக்கத்தையும் மகளிர்க்கு உத்வேகத்தையும் வழங்கும் ஸ்ரீவித்யா

பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம். 

சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்களைப் போற்றும் விதமாக எவர் ஒருவரின் பின்புலமும் இன்றி, சாததித்த பெண்களின் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீவித்யா வாசுதேவன் என்பவரைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் படித்து சமூகத்தில் உயர் நிலையை அடைவதென்பது சுலபமான செயல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தனது விருப்பங்களை சுருக்கிக் கொண்டு, தனது குடும்பத்துக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு பெண் வெற்றியடைகிறார் என்றால் அவர் உண்மையிலேயே பாராட்ட பட வேண்டியவர். 

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஸ்ரீவித்யா படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால், பல பட்டங்களை படித்து பெற்றார். இவர் இத்துடன் நின்றுவிடாமல், கல்லூரியில்  விரிவுரையாளாராக பணியைத் துவங்கி பல்வேறு பரிமாணங்களில் உயர்ந்து, கல்லூரி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.  மாணாவர்களுடன் கலந்துரையாடல், மற்றும், அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பதோடு, கலாசார ஒருங்கிணைப்பாளராகவும், சமூக வானொலியில், ரேடியோ ஜாக்கி போன்ற பயிற்சியினை மாணவர்களுக்கு கற்று தருவதுடன், சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் வினாத்தாள் தயாரிப்பு, மற்றும் மதிப்பீட்டாளராகவும்  செயல்பட்டு வருகிறார். பல்வேறு கல்லூரி நிர்வாக அமைப்பு குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.

இவர் 50-க்கும் மேற்பட்ட ஆராய்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வரைவு திட்ட அறிக்கைகளை தயாரித்துள்ளார். இவர் 20 மேற்பட்ட நாளிதழ்களில் பதிப்பு குழுவில் செயல்பட்டு வருகிறார். சிறந்த விரிவுரையாளாருக்கான விருதை பெற்றுள்ளார். தேசிய கல்வியியல் செம்மையாளார் விருது. திருச்சி ஹோலி க்ராஸ் கல்லூரியில் சிறந்த பெண் நிர்வாகி விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மாணவர்களுக்கு பல்வேறு உதவி பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக வேத பாட சாலை மாணவர்களுக்கு சுய முன்னேற்ற உரைகளை வழங்குகிறார்.

மேலும், பல மாணாவர்கள் கல்வி பயிலவும் உதவி வருகிறார். இதை தவிர பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை தரும் உரைகளை நடத்தி வருகிறார். அவரைப்போல் வருங்கால பெண் குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்க இவர் ஒரு எடுத்துக்காட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com