சவுத் இந்தியன் வங்கியில், புரொபிசனரி மேனேஜர் (IT), புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT), எக்சிகியூடிவ் / அதிகாரி போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள் & காலிப்பணியிடங்கள்:
புரொபிசனரி மேனேஜர் (IT),
புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT),
எக்சிகியூடிவ் / அதிகாரி உள்ளிட்ட பல பணிகள்.
மொத்தம் = 29 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.05.2019
ஊதியம்:
புரொபிசனரி மேனேஜர் (IT), புரொபிசனரி சீனியர் மேனேஜர் (IT) போன்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக, ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரை மாத சம்பளம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற பணிகளுக்கு, பணிகளை பொருத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.800
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி:
பி.டெக் / பி.இ (CS / IT / EC / EEE / AEI) / எம்.சி.ஏ / எம்.எஸ்சி (CS / IT) / பி.எஸ்சி (Agri) / எம்.எஸ்சி (Agri) / எம்.பி.ஏ (Finance / Banking) போன்ற பட்டப்படிகளில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று,
குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
குறிப்பிட்ட சில பணிகளுக்கு, பணி அனுபவம் அவசியம்.
பணிகளுக்கேற்ப பணி அனுபவங்கள் மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.southindianbank.com - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/Careers/careersdetails.aspx?careerid=163 - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.