நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய ஏழு மாநிலங்களின் மனு தள்ளுபடி.!

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய ஏழு மாநிலங்களின் மனு தள்ளுபடி.!
நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய ஏழு மாநிலங்களின் மனு தள்ளுபடி.!

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய ஏழு மாநிலங்களின் மனுவை  இன்று தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நாடுமுழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில், வரும் 13 ஆம் தேதி மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடுமுழுவதும் வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் கொரோனா சூழலில் நீட் தேர்வினை  ஒத்தி வைக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், புதுச்சேரி, மேற்குவங்கம், பஞ்சாப், மராட்டியம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஏழு ஆகிய மாநிலங்களும் நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, ஏழு மாநிலங்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 ஏற்கனவே, நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com