ஈரோட்டுக்கென்றே ஒரு இலவச தனியார் வேலைவாய்ப்புத்தளம்
ஒரு இளைஞர் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்காக அழைகிறான். நல்ல பணி வேண்டும் என்பதற்காக சிலரிடம் பணம் கொடுத்தும் ஏமாறுகிறான். சரியான வேலை கிடைக்கவில்லை. மேலும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். ஒரு நாள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது என்று தனது நண்பர்களிடம் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறான். மற்றொரு பக்கம் ஈரோட்டில் வேலை வேண்டும் என்றால் அந்த இணையதளத்தை பாருங்கள் என்கிற குரல். விவரங்களை சேகரிக்க தொடங்கினோம்.
படித்து முடித்து வேலைகிடைக்காமல் அழைந்த அந்த நாட்கள், அடுத்தவர்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக சொந்த ஊரில் 2014-ஆம் ஆண்டு ஒரு இலவச வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்குகிறார் ஒரு இளைஞர். படிப்படியாக வேலையில்லா பட்டதாரிகள் மத்தியில் பிரபலம் அடையச் செய்கிறது அந்த தளம். 4 ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலவச வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள் என்று பெருமையுடன் சொல்கிறது அந்த தளம்.
அந்த தளத்தை ஆரம்பித்தவர் 2010-ஆம் ஆண்டில் புதியதலைமுறையின் பயிற்சிப் பத்திரிக்கையாளர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்பதை சந்தோஷத்துடன் இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறோம். மேலும் ஈரோடு மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டத்தினர் www.kongumalar.com என்கிற இணையதளத்திற்குச் சென்று இலவச வேலைவாய்ப்புத் தகவல்களையும், உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.