பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - புதிய தேர்வு தேதி வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - புதிய தேர்வு தேதி வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் - புதிய தேர்வு தேதி வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தேர்வுகளை நடத்துவதா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து இன்று முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி,

ஜூன் 15 - மொழிப்பாடம்
ஜூன் 17 - ஆங்கிலம்
ஜூன் 19 - கணிதம்
ஜூன் 22 - அறிவியல்
ஜூன் 24 - சமூக அறிவியல்
ஜூன் 25 - தொழில்கல்வி தேர்வு

மேலும் மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (வேதியியல், புவியியல், கணக்கியல்) ஜூன் 16 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com