\
சென்னை பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்படும் செமஸ்டர் தேர்வுகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்படும் செமஸ்டர் தேர்வுகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்படும் செமஸ்டர் தேர்வுகள்
Published on: 

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21ஆம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பதை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com